மட்டக்களப்பில் தீப்பற்றி வெடித்த எரிவாயு அடுப்பு! அதிர்ச்சி சம்பவம்
சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு தீ பற்றி எரிந்தது வெடித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் மட்டக்களப்பு - சாந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஊடாக இரவு நேர சமையல் மேற்கொண்ட நிலையிலேயே, அடுப்பு முழுவதும் தீ பற்றியதுடன் சிறிது நேரத்தில் அடுப்பு முற்று முழுதாக வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, உடனடியாக சிலிண்டரை அப்புறப்படுத்தியமையால் பாரிய தீ விபத்து ஒன்று தடுக்கப்பட்டதாகவும் வீட்டார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தீப்பற்றிய வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரிலோ, ரெகுலேட்டர்களிலோ, வயர்களிலோ எந்த தீ பரவலும் ஏற்படவில்லை என்பதுடன் அடுப்பு மட்டுமே தீ பற்றி எரிந்து வெடித்துள்ளது.