எரிவாயு விலை திருத்தம்: பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எரிவாயு விலை திருத்தம்
உலக சந்தையில் எரிவாயு விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிவாயு விலை மாதந்தோறும் திருத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி அறிவிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அனைத்து பரிந்துரைகளும் ஏற்கனவே நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, மேலும் அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் அதை அறிவிக்க முடியாது என அதன் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரத்திற்குள் தொடர்புடைய பரிந்துரைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், கடந்த சில மாதங்களாக எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளபடவில்லை என்றும், உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும், மக்களின் சிரமங்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு பாதிக்காத வகையில் எரிவாயு விலையை மாற்றாமல் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.