மசாஜ் நிலைய யுவதிகள் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் ; பெண் உட்பட 5 பேர் கைது
கம்பஹா, யக்கலை பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றிற்குள் அங்கிருந்த இரு பணிப் பெண்களைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
வாளுடன் நுழைந்த இனந்தெரியாத நபர்கள்
வாளுடன் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இரு பணிப் பெண்களைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இந்த சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் 23 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களிடமிருந்து, பணிப் பெண்களைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் பாதிக்கப்பட்ட பணிப் பெண்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.