கணேமுல்ல சஞ்சீவ கொலை; நீதிம்ன்றம் இன்று விடுத்த உத்தரவு
கொழும்பு - புதுக்கோட்டை நீதிம்ன்றில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 10 பேரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள், இன்று ஸ்கைப் தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
55 பேரிடம் விசாரணை
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் இதுவரை சுமார் 55 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் 25 ஆதாரங்கள் அரசு நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமையால், சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.