கனேமுல்ல சஞ்சீவ கொலை ; செவ்வந்தியின் தாய் சகோதரர் தொடர்பில் வெளியான தகவல்!
கொழும்பு - நீதிமன்றில் கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியின் தாயும், சகோதரரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட போது பொலிஸார் இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
கனேமுல்ல சஞ்சீவ கொலை கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தெரிவித்து இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க என்ற 23 வயது இளைஞனும், சேசத்புர தேவகே சமந்தி என்ற 48 வயது பெண்ணும் கொலை தொடர்பான தகவல்களை மறைத்து, குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.