காலியில் வைத்தியசாலையில் உயிரிழந்த 8 மாத குழந்தை: வெளியான அதிர்ச்சி தகவல்!
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் திடீர் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 8 மாத குழந்தையின் உடற்கூறுகள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அரச இரசாயன பகுவாய்வாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ் விடயம் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி யு.ஜி.பி ஜயரத்ன வழங்கிய அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடம் பரவிய நோய் தொற்று குறித்த குழந்தையின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்ததையடுத்து உடற்கூறுகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருக்கமானவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு சட்ட வைத்திய அதிகாரி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.