போராட்ட களத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaska) தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் காலிமுகத்திடல் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் 38வது நாளை எட்டியுள்ளது.
இந்த நிலையில் இறுதியுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு வாரம் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை பல இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் இன்றையதினம் இரவு கோட்டா கோ கோம் ஆர்ப்பாட்ட களத்தில் 13 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிக்காலத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.