காலி நகரின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியது; போக்குவரத்து ஸ்தம்பிதம்
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, காலி நகரின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
தலப்பிட்டி, பெலிகஹா மற்றும் கஹண்டுவவத்த பகுதிகளிலிருந்து வரும் நீரில் காலி பத்தேகம பிரதான வீதி முற்றிலுமாக மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரகொட கால்வாய் நிரம்பி வழிவதால் காலி கித்துலம்பிட்டி வீதி மற்றும் மொரகொட உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
ஒழுங்கற்ற மேம்பாட்டு செயல்முறை, அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் மற்றும் வடிகால் அமைப்புகளை முறையற்ற வகையில் சுத்தம் செய்தல் ஆகியவை இந்த நிலைமைக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை அறிவித்த போதிலும், எந்த தீர்வும் காணப்படவில்லை என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.