குற்றக் கும்பல் தலைவனின் உறவினர் மீது துப்பாக்கிச்சூடு! அஹுங்கல்லவில் சம்பவம்
காலி மாவடத்தில் உள்ள அஹூங்கல்ல பகுதியில் உந்துருளியில் பயணித்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றையதினம் (09-01-2025) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபரின் தோள் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்யசகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த நபர், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய லொக்கு பெட்டி என்ற நபரின் உறவினர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், காயமடைந்த நபர் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்யசகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.