MSD பாதுகாவலர்களை மறுத்த கஜேந்திரகுமார், கஜேந்திரன்! உண்மையில் நேற்று நடந்தது என்ன?
கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல் உண்டு எனில் ஏன் அவர்கள் தமக்கு பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பெற்றுக்கொள்ளவில்லை?
தமக்கு இங்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றுகூறித்தானே அவர்கள் MSD பாதுகாவலர்கள் வேண்டாம் என்றனர்.
அரசாங்கத்தை குறைகூறி என்ன பயன்?
பொலிஸ் பாதுகாப்பு இல்லாமல் திரிவதுதான் "தமிழ் தேசியம்" எனும் குருட்டாம்போக்கு மனப்பான்மையில் இருந்துகொண்டு அரசாங்கத்தை குறைகூறி என்ன பயன்?
ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குறிய பாதுகாப்பு அணியை கொண்டிருக்கும்போது கஜேந்திரகுமார் கஜேந்திரன் ஆகியோர் அவர்கள் தமக்கு வேண்டாம் என கூறிவிட்டு பாதுகாப்பின்றி திரிந்துகொண்டு தமக்கு இன்று பாதுகாப்பில்லை தம்மை சுட வருகிறார்கள் என்றெல்லாம் கூறுவது வேடிக்கை அல்லவா?
உண்மையில் நேற்று நடந்தது என்ன? ஒரு பரீட்சை நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் பாடசாலைக்கு அருகில் திடீரென சில இளைஞர்கள் ஒன்றினைந்து கூட்டம் நடத்துகின்றனர் அங்கு சில வாகனங்களில் ஆட்கள் வருகின்றனர்.
அதில் பாராளுமன்ற உறுப்பினரும் இருக்கிறார். இங்கு பிரதேசத்திற்கு இருவர் மூவர் என அரசாங்கம் புலனாய்வாளர்களை நியமித்துள்ளது அவர்களின் பணி ஊருக்குள் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்வது தகவல் சேகரிப்பது.
மாவீரர் தினத்திற்கு மரக்கன்று கொடுத்தேன் மாவீரர் நாளுக்கு வாசலில் விளக்கேற்றினேன் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு கஞ்சி காய்ச்சி கொடுத்தேன் என்ற காரணங்களுக்காகவெல்லாம் பலதடவை என்னிடம் இவ்வாறான புலனாய்வாளர்கள் விசாரணை செய்துள்ளனர்.
அதுவெல்லாம் இயல்பாக நடக்கும் ஒன்று அதையெல்லாம் பெரிய விடயமென தூக்கிப்பிடித்து அரசியலாக்க விரும்பாததால் பலரும் நாய் நாயின் வேலையையும் கழுதை கழுதையின் வேலையையும் பார்க்கட்டும் நாம் நம்முடைய வேலையை பார்ப்போம் என இருந்துவிடுவதுண்டு.
அதேபோன்றுதான் நேற்றும் நாய் நாயின் வேலையையும் கழுதை கழுதையின் வேலையையும் பார்த்துக்கொண்டிருந்தது அதற்குள் போய் நீயேன் இந்த வேலையை பார்க்கிறாய் அவன் ஏன் உந்த வேலைக்கு வந்தானென்று கஜேந்திரகுமார் விசாரிக்க வெளிக்கிட்டு தரக்குறைவாக பொலிசாருடன் பேசி அவர்களும் திருப்பிபேசி கைகலப்பு வரைக்கும் போயிருக்கிறது நிலமை.
தாக்குதலை சமாளிக்க முடியாமல் புலனாய்வாளர்களே கஜேந்திரகுமார் அணியிடமிருந்து தப்பியோடியிருக்கின்றனர். உன்னுடைய சுதந்திரம் என்பது என்னுடைய மூக்கு நுனிவரை மட்டுமே என்பது இயல்பான ஒரு வாசகம்.
எவரும் எவரின் மீதும் அத்துமீற முடியாது அது பாராளுமன்ற உறுப்பினராயினும் சரி பாதுகாப்பு தரப்பாயினும் சரி. இதிலே இரு தரப்புமே அத்துமீறி இருக்கிறது.
சுப்ரமணிய பிரபா