இணையத்தளத்தில் பயணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்ற சம்பவம் குறித்து மேலும் விசாரணை
இணையத்தளம் ஊடாக பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை, இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், குறித்த சம்பவத்தில் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்புபட்டுள்ளார்களா? என்பதனை கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றுரைத்தது.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானித்தார்.
அத்துடன், அன்றைய தினம் இந்த வழக்கு விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.