எரிபொருள் விநியோகஸ்தர்கள் அதிரடி அறிவிப்பு
இலங்கை எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஆர்டர் செய்யும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
தற்போது கையிருப்பில் உள்ள பெட்ரோலியப் பொருட்களை மட்டுமே விநியோகிப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எந்த ஆர்டர்களையும் வழங்கமாட்டோம்
அதேசமயம் எரிபொருள் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு எந்த ஆர்டர்களையும் வழங்கமாட்டோம் என்று எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் கூறியுள்ளது.
தற்போது எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% தள்ளுபடித் தொகையை ரத்து செய்து, அது நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய சூத்திரத்தின் படி பணம் செலுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது செலுத்தப்படும் தொகை சட்டவிரோதமானது என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
இந்த நிலையில், எரிபொருள் ஓர்டர் செய்வதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் சங்கம் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தது.