யாழ்.சித்தங்கேணியில் QR குறியீட்டு முறையில் எரிபொருள் விநியோகம்!
யாழ்.சங்கனை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீட்டு முறையில் இன்றையதினம் (03-08-2022) சிறப்பான எரிபொருள் விநியோகம் நடைபெற்றது.
பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர், பொது முகாமையாளர், ஊழியர்கள் மற்றும் சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் சிறப்பான முறையில் பெற்றோல் விநியோகம் நடைபெற்றது.
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு தனித்தனி வரிசைகள் பேணப்பட்டதுடன் சர்வமத தலைவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு பிற்பகல் 4 மணிக்கே பெற்றோல் வந்தது.
இதனால் பெற்றோல் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இருந்தாலும் ஊழியர்கள் நேரத்தினை கருத்தில் கொள்ளாது இரவு இரவாக பெற்றோலை விநியோகம் செய்தனர்.