சுவிஸ் மக்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுவிட்சர்லாந்து மக்களின் ஆயுட்காலம் குறைந்துவிட்டதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்த தகவலை சுவிட்சர்லாந்து பெடரல் புள்ளியியல் அலுவலகம் (FSO) இன்று திங்கட்கிழமை (25) வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரத்தில் இதனை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பல தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக சுவிஸில் ஆயுட்காலம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2020-ல் பிறந்த ஆண்களுக்கு 9 மாதங்கள் (0.9 வருடங்கள்) குறைந்து 81.0 வருடங்களாகவும், பெண்களுக்கு 5 மாதங்கள் (0.5 வருடங்கள்) குறைந்து முதல் 85.1 வருடங்களாகவும் குறைந்துள்ளது. கடைசியாக இதுபோன்ற சரிவு ஆண்களுக்கு 1944-லும், பெண்களுக்கு 1962-லும் ஏற்பட்டதாக பெடரல் புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.
சுவிஸில் குறிப்பாக முதியவர்களுக்கு ஆயுட்காலம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக என பெடரல் புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது. 2019-ஆம் ஆண்டில் 65 வயதான ஆண்கள் மேலும் 20.0 வருடங்கள் வாழலாம், மற்றும் 65 வயதான பெண்கள் 22.7 ஆண்டுகள் கூடுதலாக வாழலாம் என கணிக்கப்பட்டது. அனால், கடந்த ஆண்டு (2020) அதே 65 வயது முதியவர் மேலும் 19.3 வருடங்களும் மற்றும் 65 வயதுப் பெண் மேலும் 22.2 ஆண்டுகள் வாழ எதிர்பார்க்கலாம் என FSO கூறுகிறது.
அதாவது சுவிஸில் பெண்களின் ஆயுட்காலம் 5 மாதங்களாகவும், ஆண்களின் ஆயுட்காலம் 7 மாதங்களாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதுபோன்ற சரிவு பிறகு ஆண்கள் மத்தியில் ஒருபோதும் காணப்படவில்லை என்று பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், 1944-ஆம் ஆண்டு குறிப்பாக பெண்களுக்கு கடுமையான குளிர்காலம் காரணமாக இப்படி ஒரு வீழ்ச்சி காணப்பட்டதாக FSO கூறுகிறது.