சீனாவில் டிரெண்டாகும் பிரண்ட்ஷிப் மேரேஜ்; கஸ்டம் இல்லை....துன்பம் இல்லை ....ஜாலிதான்!
பொதுவாக நம் நாடுகளில் 24, 25 வயதை தாண்டிவிட்டாலே ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என பார்ப்பவர்கள் எல்லோரும் கேட்க தொடங்கிவிடுவார்கள்.
தற்கால இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகின்றனர். வேலை , படிப்பு , இலட்சியம் என ஆயிரம் காரணங்களை கூறுவார்கள்.
தாம்பத்திய உறவு இருக்காது.....
இந்நிலையில் இதிலிருந்து தப்பிக்க பிரண்ட்ஷிப் மேரேஜ் என்ற புது ஐடியாவை சீன இளைஞர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது பரஸ்பர நம்பிக்கை நட்பின் அடிப்படையில் இந்த திருமணம் இருக்கும். காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் திருமண பாரம்பரிய முறை இதில் இருக்காது.
அதாவது அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் தனித்தனியாக தான் வாழ்வார்கள். இருவரும் படுக்கையறைய பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். விவரமாக சொல்ல வேண்டும் என்றால், இல்லற வாழ்க்கை கிடையாது-தாம்பத்திய உறவு இருக்காது.
இவர்களின் திருமணத்தை ஆண்-பெண் இரண்டு குடும்பம் அங்கீகரித்தாலும் , சட்டம் அங்கீகரித்தாலும் அவர்கள் கணவன்-மனைவியாக இருப்பது இல்லையாம்.
இந்த மாதிரியான நடைமுறை முதன் முதலாக ஜப்பான் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் தான் பிரபலம் ஆனது. தற்போது, இது கொஞ்சம் விரிவடைந்து சீனர்களும் இந்த நடைமுறையை விரும்ப ஆரம்பித்து இருக்கிறார்கள்.
குழந்தையை விரும்பினால்...
இந்த திருமணத்தில் இருக்கும்போது நீங்கள் யார் கூடயாவது டேட்டிங் செல்ல வேண்டும் என்று நினைத்தால் கூட போகலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது.
ஒருவேளை குழந்தையை தத்தெடுக்க விரும்பினால், அல்லது செயற்கை கருவுறுதல் முறையை பின்பற்றி குழந்தையை பெற்றெடுத்தும் வளர்க்கலாமாம்.
இந்த பிரண்ட்ஷிப் மேரேஜ் என்று கூறப்படுகிற நட்பு திருமணம் சீனாவில் மிகவும் அதிகரித் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை மூலமாக திருமணம் சார்ந்த பேச்சு வார்த்தைகளால் தங்களுக்கு தரப்படும் அழுத்தம் குறைவதாக சீனர்கள் நம்புகின்றனர்.
அதேபோல திருமணத்துக்கு பிறகும் கூட லைஃப் பார்ட்னரால் வரும் பிரச்சனையை சந்திக்க வேண்டிய தேவையில்லை என்றும் கூறுகின்றனர். அதன் காரணமாக சீன இளைஞர்கள் , யுவதிகள் பிரண்ட்ஷிப் மேரேஜ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்களாம்.
அதேவேளை சீன அரசாங்கம் இளையோரிடையே திருமணத்தை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.