இலங்கையில் முட்டையால் மூடப்படும் ஹோட்டல்கள்!
இலங்கையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முற்றாக மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின், இந்த நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பொருட்களின் உற்பத்தி முடக்கம்
முட்டை தட்டுப்பாடு காரணமாக அப்பம், பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி, முட்டை ரோல்ஸ், கேக், புடிங், வட்டிலப்பம் போன்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் வர்த்தக அமைச்சு உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த பரிவுகளும் உடனடியாக தலையிட்டு முட்டை சங்கங்களுடன் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனின் பிரச்சினை தீவிரமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் அவதானமெடுக்க வேண்டுமென தெரிவித்த அவர், இல்லையெனில் ஹோட்டல் தொழில் தொடர முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அதேசமயம் முட்டை தட்டுப்பாட்டினால் கேக் உற்பத்தி போன்ற வீட்டு கைத் தொழில்களும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அசேல சம்பத் மேலும் தெரிவித்தார்.