பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கு ஏற்பட்ட நிலை!
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவுக்கு (Duminda Dissanayake) எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும், கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (23) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிப்பதற்கு எடுத்த தீர்மானம் தனக்கும் பொருந்தும் என்று தெரிவித்த அவர், மத்திய குழுக் கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாக சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.