விடுவிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள்!
யாழ்ப்பாணம்-ஊர்க்காவற்துறையில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 09 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கடந்த (25.07.2023) அன்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் இன்றைய தினம் (08.08.2023) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்க்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் 18 மாத சாதாரண சிறைத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த ஒன்பது மீனவர்களையும் மெரிகானா முகாமிற்கு அனுப்பி தாயத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.