பிரதி அமைச்சரின் பெயரை பயன்படுத்தி மோசடி ; மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, நபர் ஒருவரோ அல்லது குழுவினரோ தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு பணம் கோருவதாகவும் மற்றும் ஏனைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நபர்களுக்குப் பணத்தையோ, தனிப்பட்ட தகவல்களையோ அல்லது ஆவணங்களையோ வழங்க வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.