ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் மோசடி; அவதானம் மக்களே
ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளில் ஈடுபடும் கும்பல் குறித்து திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
+94115226126, +0115226126 , 0771167739, 0742756098 ஆகிய இலக்கங்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

டிஜிட்டல் அடையாள அட்டை, மின் தேசிய அடையாள அட்டைக்கான விபரங்களைப் பதிவு செய்வதாகக் கூறி இச் செயலிகள் ஊடாகத் தகவல்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://drpgov-lk[.]com எனும் போலி இணையத்தளத்தினூடாகவும் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
எனவே சந்தேகத்திற்கிடமான இணையதளங்களுக்கு உங்களது விபரங்களை வழங்குவதையோ அல்லது நிதித் தகவல்களைப் பரிமாறுவதையோ முற்றாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.