யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்தவருக்கு நேர்ந்த கதி!
வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இளைஞன் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதாக கூறி 14 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தினை பெற்றுக்கொண்டவர் , எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அது தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவரது முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேகநபரை நேற்று முன்தினம் (03) கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, யாழ். நீதவான் நீதிமன்றில் நேற்று (04) முற்படுத்தியவேளை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.