பிரான்ஸில் நடுத்தர வயதை கடந்த இலங்கை தமிழரின் முகம் சுழிக்க வைத்த செயல்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரபல ஆடைக்கடையில் பணிபுரிந்த போத்துக்கீசப் பெண்ணை துன்புறுத்திய இலங்கையருக்கு 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலு தெரியவருகையில், 2018 முதல் 2020ம் ஆண்டு வரை பின் தொடர்ந்து துன்புறுத்தியதாக 43 வயதான வீ நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மன உளைச்சலால் எடை அதிகரித்த பெண்
போத்துக்கீசப் பெண்ணின் வேலை, இடம், வீடு, தேவாலயம் என அனைத்து இடங்களிலும் இலங்கையர் பின்தொடர்ந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி 25 கிலோ உடல் எடை அதிகரிக்கும் அளவுக்குப் பாதிக்கப்பட்டார்.
3 முறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் 2020ம் ஆண்டு தேவாலயம் ஒன்றில் வைத்து அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு சாதாரண உடையில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரியால் அவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார். மனநல நிபுணர்கள் சோதனையில் அவர் தீவிரமான ஆளுமைக் கோளாரினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.
1997ம் ஆண்டு பிரான்சிற்கு வந்த இலங்கையர் பிரான்ஸ் நிரந்தர வதிவிட குடிமகனாவார். திருமணமான இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இவர் ஒரு கேபிள் நிபுணராகப் பணியாற்றி வருகின்றார்.
விசாரணையின் போது அந்தப் பெண் தனக்குச் சதி செய்ததாகக் கூறி அவர் நீதிமன்ற மேற்பார்வையில் இருந்த போதும் கூட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் காதல் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் பாரிஸ் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தது.
மேலும் அவர் கட்டாயம் மனநல சிகிச்சை பெற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை எந்தவகையிலும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.