பிரான்ஸில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
பிரான்ஸில் Omicron பரவ தொடங்கியுள்ள நிலையில் மற்றொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 24 மணிநேரத்தில் பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றால் 94 ஆயிரத்து 124 பேர் பாதிக்கப்பட்டதோடு 167 பேர் மரணமடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 89 இலட்சத்து 83 ஆயிரத்து 760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 22 ஆயிரத்து 462 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 11இலட்சத்து 8 ஆயிரத்து 581 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,254 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் 51,445 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 77 இலட்சத்து 52 ஆயிரத்து 717 பேர் குணமடைந்துள்ளனர்.