கனேடிய தேர்தலில் களமிறங்கும் நான்கு தமிழர்கள்
கனேடிய பொதுத் தேர்தலில் நான்கு தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி கனேடிய பொது தேர்தல் நடைபெறவுள்ளது.
இருவர் லிபரல் கட்சி, இருவர் கொன்சவேர்ட்டிவ் கட்சி
அவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும் ஏனைய இருவர் கொன்சவேர்ட்டிவ் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
கடந்த லிபரல் அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய ஹரி ஆனந்தசங்கரி, ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியிலும் புதிய முகமாக தற்போதைய மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினர் ஜுவொனிற்றா நாதன் மார்க்கம் பிக்கரிங் - புரூக்ளின் தேர்தல் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர்.
கொன்சர்வேர்ட்டிவ் கட்சி சார்பில் போட்டியிடும் லையனல் லோகநாதன் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியிலும் மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன் மார்க்கம்-யுனியன்வில் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர்.