தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான விசேட அதிரடிப்படை வீரர்கள்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ மற்றும் இமதுவ இடையேயான 102 கிலோமீற்றர் தொலைவுக்கு இடையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப்போது அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய குறைந்தது நான்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பின்னதுவ மற்றும் இமதுவக்கு இடையில் 102 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறமும் மண் மேடுகள் இவ்வாறு வீதியில் சரிந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
எனவே, மண்சரிவு ஏற்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள மேட்டுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், மேலும் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பின்னதுவ மற்றும் இமதுவ இடையேயான 102 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, காலி திசையில் இருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் வாகன சாரதிகள் இமதுவ சந்திப்பில் இருந்து வெளியேறுமாறும், கொழும்பு திசையில் இருந்து வரும் வாகன சாரதிகள் பின்னதுவ சந்திப்பிலிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான செய்திகள்
தெற்கு அதிவேக வீதியில் பயணிப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!