வடக்கில் தென்னிலங்கையர்கள் நால்வர் கைது!
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பளம்பாசி பிரதேசத்தில் தென்னிலங்கையினை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நால்வர் ஒட்டுசுட்டான் பொலிசார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் நேற்று இரவு பளம்பாசி பிரதேசத்தில் அவர்கள் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் கைதாகியுள்ளனர்.
அதன்படி மாத்தறை மாவட்டத்தினை சேர்ந்த இருவர்,புத்தளம் மாவட்டத்தினை சேர்ந்த ஒருவர் நெடுங்கேணி சேனைப்பிலவினை சேர்ந்த ஒருவர் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான ஒதியமலை,தண்ணிமுறிப்பு பகுதிகளில் புதையல் தோண்டும் நடவடிக்கைகள் அண்மைகாலத்தில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.