அரச வாகனத்தில் சொகுசாக பயணித்த நான்கு கால் பயணி! எழுந்த விமர்சனம்
அரச வாகனத்தில் சொகுசாக பயணித்த நான்கு கால் பயணி தொடர்பிலான தகவலொன்று வெளியாகியுள்ள நிலையில் அது குறித்து விமர்சங்களும் எழுந்துள்ளது.
தம்புள்ளை மாநகர சபையினால் தம்புள்ளை மேயருக்கு ஒதுக்கப்பட்ட WP PF 3340 என்ற எண்ணைக் கொண்ட வாகனத்தில் குறித்த பயணி சொகுசாக பயணித்துள்ளார். அரசாங்கத்தால் பணம் செலுத்திய ஓட்டுநரால் ஓட்டப்பட்டு வாகனத்தில் நான்கு கால்கள் கொண்ட அப் பயணி சொகுசாக பயணித்துள்ளது.
தம்புள்ளை மேயரின் வளர்ப்பு நாயே, இவ்வாறு சொகுசாக அந்த வாகனத்தில் அரசாங்க ஓட்டுநரால் அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
இருப்பினும், செல்ல நாயை ஏற்றிச் செல்ல அரசுக்கு சொந்தமான வாகனத்தைப் பயன்படுத்துவது சமூக ஊடக தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.