இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்; அரிய தகவல்கள் இதோ!

Ketheeswaram Hindu Temple Naguleswaram Thirukoneswaram Tenavaram
By Sulokshi Dec 09, 2021 01:01 PM GMT
Sulokshi

Sulokshi

Report

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட நம் இலங்கை திரு நாட்டின் அழகிய தோற்றமும் அங்ர் நிறைதுள்ள அற்புதங்களும் அளப்பரியவை. அத்தகைய இலங்கை திருநாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் சிவாலயங்கள் அமையப்பெற்றுள்ளமையானது இந்து சமயத்தின் முக்கியத்துவத்தினை நமக்கு உணர்த்தி நிற்கின்றது.

இலங்கையில் பஞ்ச ஈச்சரங்கள் புகழ்பெற்றவையாக உள்ளபோதும் , குறிப்பிட்ட இந்த நான்கு ஈச்சரங்களும்   இலங்கையை காவல் காப்பதற்காக அமைக்கப்பட்டதாக வரலாற்று தொன்மங்கள் குறிப்பிடுகின்றன.

அந்தவகையில் இலங்கையை காவல்காக்கும்    நகுலேச்சரம், திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் மற்றும் தொண்டீச்சரம் ஆகிய நான்கு திருத்தலங்களே அவையாகும்.

போர்த்துக்கேய படையெடுப்பின் போது இத்திருத்தலங்கள் இடித்து சேதப்படுத்தப்பட்டன. எனினும் நூற்றாண்டுகள் பல கடந்து பிறகு இன்று இக்கோயில்களின் தோற்றமும் நிலையும் மாற்றமடைந்து காணப்படுகின்றன.

போத்துக்கேயரால் சிதைக்கப்பட்ட இக்கோயில்களின் மீள்கட்டுமானங்களுக்கென ஆறுமுகநாவலர், சிவஸ்ரீ நகுலேஸ்வர குருக்கள், குளக்கோட்டன் ஆகியோர் உட்பட பல பெருந்தகையோர், அயராது உழைத்தவைகளாவர்.

அத்தகைய பெருமைவாய்ந்த நம் தமிழர்களின் தொன்மைகளை கூறி நிற்கின்ற இந்துக்கடவுளாம் சிவபெருமானுடைய புண்ணிய ஈச்சரங்களாக உள்ள அந்த நான்கு திருத்தலங்களின் அரிய தகவல்கள் சிலவற்றினை நாம் அறிந்துள்ளவேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில் இலங்கையை நான்கு திசைகளிலும் இருந்து நாம்மை காவல் காக்கும் அத்திருருத்தலங்களாவன,

இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்; அரிய தகவல்கள் இதோ! | Four Guards Guarding Sri Lanka Here Information

யாழ்ப்பாணம் - நகுலேச்சரம்;

நகுலேச்சரம் அல்லது நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது.

அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் ஒன்றாக இத்தலமும் இனம்காணப்பட்டுள்ளது. போர்த்துக்கேயராலும் தாக்குதலிலும் உள்நாட்டு போரின் போதும் ஏற்பட்ட சேதங்கள்.

காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இத்திருத்தலம் நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அர்ஜுனன் , மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் என புராணங்கள் இதன் தொனையையும் சிறப்பையும் குறிப்பிடுகின்றன.

இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும், அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இத்திருத்தலத்தின் தல விருட்சமாக கல்லால மரமும், தீர்த்தமான கீரிமலையும் உள்ளன.

நகுலேஸ்வரத்தின் வரலாறுகள் தொடர்பில் தட்சிண கைலாயபுராணம், யாழ்ப்பாண வைபவமாலை, சீர்பாதகுலவனாறு, கைலாசமாலை, நகுலேஸ்வர புராணம், நகுலகிரிப்புராணம் என்பனவும் நகுலேஸ்வரர் விநோத விசித்திரக் கவிக்கொத்து, நகுலாம்பிகை குறவஞ்சி, நகுலமலைச் சதகம் என்பனவும் இத்திருத்தலத்தின் சிறப்பைக் குறிப்பிடுகின்றன.

இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்; அரிய தகவல்கள் இதோ! | Four Guards Guarding Sri Lanka Here Information

 மன்னார் - திருக்கேதீச்சரம்

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் என்றழைக்கப்படும் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இத்தலமானது நவக்கிரகங்களுள் ஒன்றான கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இலங்கையின் பழங்குடியினரான நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் என்ற பெயரும் வழங்கி வந்துள்ளது.

சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காக ஆற்றியுள்ளனர். அதோடு வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்திய பூஜைகளை இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் திருக்கேதீச்சரம் ஆகும்.

இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருக்கேதீஸ்வர பெருமான் என்றும் அம்பாள் கௌரியம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அதோடு நாயன்மார்களுள் முதன்மையான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். இதன் காரண்மாக தேவாரப் பாடல் பெற்ற ஈழ நாட்டுத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.

இத் தலத்திலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும் இத் தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் இந்துக்களின் ஐதீகம் ஆகும்.

இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்; அரிய தகவல்கள் இதோ! | Four Guards Guarding Sri Lanka Here Information

 திருகோணமலை - திருக்கோணேச்சரம்

திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையின் சுவாமிமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன.

கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சா கோயிலை இடித்து சேதப்படுத்தியுள்ளான். கோட்டை சுவரில் "முன்னே குளக்கோட்டன் ..." எனும் கல்வெட்டு காணப்படுவதும், பாண்டியருடைய கயல் சின்னம் பொறிக்கப்பெற்றிருப்பதும் இக்கோவிலின் வரலாற்று பெருமையை இன்றும் உணர்த்தி நிற்கின்றது.

அதன் பின்னர் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு 1952 ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. எனினும் முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அதேவேளை திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது.

இத்தலத்தில், இறைவன் கோணேச்சரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது.

தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது. இத்தலத்தின் மீது திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. அவ்வாறே, அருணகிரிநாதரும் இத்தலத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளமையும் இன்னுமொரு சிறப்பம்சம் ஆகும்.

திருத்தலத்தின் கொடிமரமும் இராவணன் நீர்வெட்டும் தலவிருட்சமான கல்லால மரமும் இந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது.

மேலும் கோணேசர் ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

இலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்; அரிய தகவல்கள் இதோ! | Four Guards Guarding Sri Lanka Here Information

மாத்தறை - தொண்டேச்சரம் 

தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம்) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவேந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும்.

இக்கோயில் போத்துக்கீசர் ஆட்சியின் போது போத்துக்கீசரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது என வரலாறுகள் கூறுகின்றன. தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது.

"தெவிநுவர கோயில்" என இக்கோவில் அழைக்கப்படுகிறது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டது என்றும் இருப்பினும் இந்த தகவல் வெளியில் வெளிவராமல் தடுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளரான முருகர் குணசிங்கம் அவரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலங்களாகவே இன்றும் இத்தலங்கள் அறியப்படுகின்றன. இத்தலங்களை சுற்றி வரலாற்று ஆய்வுகளும் அகழ்வாராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டால் நம் பண்டைய தமிழர்களின் பல உண்மைகளை இந்த உலகம் அறிந்துகொள்ளமுடியும் என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

அதேவேளை இலங்கையில் தற்பொழுது சிறுபான்மையினராக பார்க்கப்படுகின்ற தமிழர்கள் ஆதிகாலத்தில் முழு இலங்கையையுமே ஆண்டவர்கள் என்பது, நான்கு திசையிலும் அமைந்துள்ள இந்த ஈச்சரங்களே பறை சாற்றி,   தமிழர்களின் பெருமையினை உலகுக்கு எடுத்துச்செல்லும் காலத்தால் அழியாத சாட்சியாக உள்ளமையை  யாராலும் மறுக்க முடியாது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி

பூநகரி, யாழ்ப்பாணம்

22 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

22 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பிரித்தானியா, United Kingdom

23 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவாலி, வட்டக்கச்சி

26 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், மானிப்பாய், கொழும்பு, Toronto, Canada

23 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

05 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பேர்ண், Switzerland

15 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
மரண அறிவித்தல்

மூளாய், அனலைதீவு 5ம் வட்டாரம்

19 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு 2, Scarborough, Canada

19 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், பிரான்ஸ், France

20 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்றுறை, Aulnay-sous-Bois, France

24 Mar, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US