பூட்டப்பட்டிருந்த வீடொன்றில் இருந்து வீசிய துர்நாற்றம் ; மீட்கப்பட்ட சடலம்
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவைத் திறந்து சோதனையிட்டபோது, அங்குள்ள அறை ஒன்றிலிருந்து அவ்வீட்டின் உரிமையாளரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பலகொல்ல பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய முதியவர் ஆவார்.
அவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதோடு, சடலம் மீட்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நீதிமன்ற விசாரணைக்கு பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.