முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காலமானார்
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க புற்றுநோய் காரணமாக காலமானார்.
நீண்ட காலமாக சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1973ஆம் ஆண்டு உதவி பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் துறையில் இணைந்த அநுர சேனநாயக்க, 08 வருடங்களின் பின்னர் 1985ஆம் ஆண்டு பிரதம பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில், 2008ஆம் ஆண்டு சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதுடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக 2011ஆம் ஆண்டு தரமுயர்த்தப்பட்டார்.
இதேவேளை வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் இவர், கடந்த 2016ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது