முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோஷன கமகே மற்றும் வர்த்தகரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.
சலோஷன கமகேவும், வர்த்தகர் ஒருவரும் புறக்கோட்டை பகுதியில் வைத்து நேற்று (27) இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சரத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்ட காணிக்குரிய நஷ்டஈட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக சந்தேக நபர்கள் இருவரும் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 90 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.