கூகுள் விக்கிபீடியாவில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பெருளாதார நெருக்கடி நிலையால் மக்கள் நாளாந்தம் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை பதவி விலக்கோரி நாட்டு மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கொழும்பு பகுதிகள் பெரும் பதற்றத்துடனே காணப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று ராஜினாமா செய்த அறிவித்துவிட்டு நேற்று முன்தினம் இரவே விமானப்படை விமானத்தில் மாலைத்தீவுக்கு தப்பியோடியுள்ளார்.
மாலைத்தீவு மக்களில் எதிர்ப்பால் கோட்டாபய ராஜபக்ஷ அந்நாட்டிலிருந்து சீங்கப்பூருக்கு புறப்பட்டார்.
இதேவேளை இன்றைய தினம் கோட்டாபயவின் ராஜினாமா கடிதம் சபாநாயக்கருக்கு கிடைத்துள்ளதாக சில மணிநேரத்திற்கு முன்னர் சபாநாகர் ஊடகபிரிவு தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது.
இவ்வாறான ஒரு நிலையில் கூகுள் விக்கிபீடியாவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என மாற்றப்பட்டிருப்பதை முகநூலில் Somasuriyam Thirumaran என்பவர் பதிவிட்டு இந்த கூகுள் நிறுவனமும், விக்கிபீடியா நிறுவனமும் எவ்வளவு வேகமா அப்டேட் செய்யிறான்பா என குறிப்பிட்டுள்ளார்.
