மூன்று வீடா? முன்னாள் ஜனாதிபதி மைத்திரி விடுத்த சவால்!
தன்மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியிருந்த அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது அவருக்கென கொழும்பில் மூன்று வீடுகளை நிர்மாணித்ததாக குற்றம் சுமத்தியிருந்தார்.
அதோடு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பயன்படுத்திய வீட்டை பயன்படுத்தியதாகவும், பின்னர் அது மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை மது அருந்தியபடி கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறியிருந்தாலும், தான் மது அருந்துபவன் அல்லவெனவும் கூறினார்.
இந்நிலையில் தன்மீதான குற்றச்சாட்டு குறித்து இன்று நாடாளுமன்றில் கருத்துக்கூறியபோதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.