பீதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி எடுத்த முடிவு!
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த தவறினால் நான் சிறைக்கு செல்ல நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதனால், தமக்கு நெருக்கமான மக்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து பணத்தை திரட்டுவதற்கு நிதியமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நான் சிறைக்கு செல்ல நேரிடும்
இவ்வளவு பாரிய தொகையை நட்டஈடாக செலுத்தும் திறன் தன்னிடம் இல்லாததால், மக்களிடம் பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அதோடு என்னிடம் சொந்தமாக உந்துருளி கூட இல்லை என தெரிவித்த மைத்திரி,
நிதியத்தை நிறுவுவதற்காக குழுவொன்றை அமைப்பேன் எனவும் நாடு முழுவதிலும் இருந்து பணம் சேகரிக்க வேண்டும். அத்துடன் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கத் தவறினால், நான் சிறைக்கு செல்ல நேரிடும்" என்று அவர் கூறினார்.
மேலும் மூன்று ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டேன் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எனக்கு மாம்பழ செய்கையை தவிர வேறு வருமான வழியில்லை என்றும் கூறியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டுமென மைத்ரிபால சிறிசேன நீதிமறம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.