முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் காலமானார்
முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக 95 வயதில் வத்திக்கான் இல்லத்தில் மரணமடைந்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாப்பரசர் பதவியில் இருந்து விலகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக அவர் வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் தனது இறுதிக்காலத்தை கழித்திருந்தார்.
பதவி இராஜினாமா
கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாக வழிநடத்திய பதினாறாம் பெனடிக்ட், 2013 இல் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதனையடுத்து 1415 இல் போப்பாண்டவர் 12ஆம் கிறகெரிக்கு பின்னர் இராஜினாமா செய்த முதல் பாப்பரசராக அறியப்படுகிறார்.
ஜோசப் ராட்ஸிங்கர் என்ற இயற்பெயருடன் ஜேர்மனியில் பிறந்த அவர், 78 வயதில் ( 2005 ஆம் ஆண்டு) தெரிவுசெய்யப்பட்ட மிக வயதான பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.