முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அதிரடி கைது!
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலன எதிர்ப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் லொறி ஒன்று கூட்டிச் சென்றமை தொடர்பில் வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக பிரிவிற்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு பின் அவர் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரி பாகங்களைப் பயன்படுத்தி லொறி ஒன்றினை இணைத்தமை மற்றும் அதற்கு மோசடியான ஆவணங்களை உருவாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட விஜித் விஜயமுனி சொய்சா நாளை (20) பண்டாரவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமாக வேறு வாகனங்களை கூட்டிச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்பதை கண்டறிய வலனா எதிர்ப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.