முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது
இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் ஆஜரான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்றையதினம் (5) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகி இருந்த நிலையில் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.