முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு பிணை ; பிறப்பிக்கப்பட்ட தடை

Colombo Sri Lanka Magistrate Court Shiranthi Rajapaksa
By Vironika Oct 16, 2026 10:34 AM GMT
Report

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான சிரந்தி ராஜபக்ஷவைப் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு பிணை ; பிறப்பிக்கப்பட்ட தடை | Former First Lady Shiranthi Rajapaksa Granted Bail

வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை

இதன்படி, சந்தேகநபரை 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் முன்னேற்றத்தை டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை; நீதிமன்றுக்கு அறிக்கை

ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை; நீதிமன்றுக்கு அறிக்கை

தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான 10 மில்லியன் ரூபா பணம் சட்டவிரோதமான முறையில் ‘சிரிலிய சவிய’ அமைப்பிற்கு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அண்மையில் சிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தார்.

சவூதி அரேபியாவிற்கான விமான சேவைகள் தொடர்ந்து இடைநிறுத்தம்

சவூதி அரேபியாவிற்கான விமான சேவைகள் தொடர்ந்து இடைநிறுத்தம்

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US