பேஸ்புக் தொடர்பில் பகீர் தகவல் வெளியிட்ட முக்கிய பெண்!
பேஸ்புக் தொடர்பில் முன்னாள் ஊழியரான பிரான்சிஸ் ஹாகன் (Frances Haugen) பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, பேஸ்புக் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்குவதாகவும், வருமானத்திற்காக பயனர்களின் பாதுகாப்பை சமரசம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கின் சில ரகசிய ஆவணங்களை வெளியிட்ட, அதன் முன்னாள் ஊழியர் பிரான்சிஸ் ஹாகன், இப்போது வெளிப்படையாக இந்த குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க சென்ட் சபையில், பிரான்சிஸ் ஹாகன் அளித்துள்ள வாக்குமூலம் பேஸ்புக் (Facebook) நிறுவனத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமின் மூலம் இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், மன நோய் உட்பட பல பிரச்சனைகளை பற்றி பேஸ்புக் நிர்வாகம் நன்கு அறிந்திருந்தும், அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அத்துடன் ‘நான் பேஸ்புக்கில் சேர்ந்தேன், அதன் மூலம் உலகிற்கு நல்லது செய்ய முடியும் என்று நான் நம்பினேன், ஆனால் பேஸ்புக்கின் நடவடிக்கைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்ததால் நான் வெளியேறினேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேஸ்புக் நிறுவனத்திற்கு லாபம் ஒன்றே குறி என சாடியுள்ள அவர், பேஸ்புக் செயல்பாடு பிரிவினைவாத உணர்வை ஊக்குவித்து ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என குற்றம் சாட்டினார்.
அதோடு திங்கட்கிழமை முகநூல் ஐந்து மணித்தியாலங்கள் செயல் இழந்ததுஇஏன் அது செயல் இழந்தது என்பது எனக்கு தெரியாது ஆனால் அந்த ஐந்துமணித்தியாலங்கள் பிரிவினைகளை தூண்டுவதற்கும் ஜனநாயகங்களை சிதைப்பதற்கும் யுவதிகளும் இளம் பெண்களும் தங்கள் உடல்குறித்து மோசமாக உணர்வதற்கும் பேஸ்புக் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.