முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கடூழிய சிறை
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண முதலமைச்சராகப் பணியாற்றியபோது, முதல் குற்றவாளியான எஸ்.எம். ரஞ்சித், தனது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேனவின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு எரிபொருள் ஒதுக்க ஏற்பாடுகளைச் செய்ததாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சாட்டியது.
அதோடு சாந்தி சந்திரசேனவின் எரிபொருள் கொடுப்பனவு ஏற்கனவே அவரது சம்பளத்தில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், அவரது உத்தியோகபூர்வ வாகனத்திற்கு எரிபொருள் ஒதுக்க ஏற்பாடுகளைச் செய்ததாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.