முல்லைத்தீவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வனவள திணைக்கள அதிகாரிகள்!

Sri Lanka Police Mullaitivu Sri Lankan Peoples Sri Lanka Final War
By Shankar Jul 12, 2023 07:27 PM GMT
Report

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள் முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முல்லைத்தீவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வனவள திணைக்கள அதிகாரிகள்! | Forest Officials Attacked Women In Mullaitivu

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு குறித்த பகுதியில் 45 குடும்பங்கள் குடியேறி இருந்தனர்.

முல்லைத்தீவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வனவள திணைக்கள அதிகாரிகள்! | Forest Officials Attacked Women In Mullaitivu

இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபோது குறித்த பகுதியை விட்டு மக்கள் சென்ற பின்னர் குறித்த பகுதியில் இருந்த குடும்பங்கள் மீள்குடியேற்றம் வரவில்லை பலர் உயிரிழந்தும் வேறு சிலர் வேறு இடங்களில் குடியோறிவிட்டனர்.

இவ்வாறான நிலையில் குறித்த கிராம மக்கள் 2012 ம் ஆண்டு கைவேலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது குறித்த பகுதியை வனவள திணைக்களம் எல்லைக் கற்கள் இட்டு வனப்பகுதியாக்கிவிட்டனர்.

முல்லைத்தீவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வனவள திணைக்கள அதிகாரிகள்! | Forest Officials Attacked Women In Mullaitivu

இவ்வாறான பின்னணியில் மக்கள் வாழ்ந்த வீடுகள் கட்டு கிணறுகள் கட்டடங்கள் பயன்தரு மரங்கள் உள்ள குறித்த கைவேலி பகுதியில் காணிகள் வீடுகள் அற்ற சுமார் 20 குடும்பங்கள் பலகாலமாக குடியேறி வாழ முயற்சித்து வந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது குடும்பங்களை கொண்டு நடத்த முடியாத நிலையில் வாடகை வீடுகளில் இருக்க முடியாத நிலையில் குறித்த 45 வீட்டுத்திட்டம் பகுதியில் சென்று கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

முல்லைத்தீவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வனவள திணைக்கள அதிகாரிகள்! | Forest Officials Attacked Women In Mullaitivu

இந்த நிலையில் இன்று (12-07-2023) மதியம் குறித்த பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள் அங்கு மக்கள் போட்ட கொட்டில்களை அகற்றி கொழுத்துவதற்காக மண்ணெண்ணையுடன் வருகைதந்ததாகவும் பெண்கள் தனிமையில் இருந்த கொட்டில்களில் சென்று முன்னாள் போராளியான பெண் ஒருவர் மீதும் ஆண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வனவள திணைக்கள அதிகாரிகள்! | Forest Officials Attacked Women In Mullaitivu

குறித்த இருவரும் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வனவள திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்ற மண்ணெண்ணையை பறித்து அங்கு இருந்த நபரொருவர் தன்மீது ஊற்றி தீக்குளிக்க முற்ப்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் சென்று புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் அவர்களுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடி குறித்த மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்,

முல்லைத்தீவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வனவள திணைக்கள அதிகாரிகள்! | Forest Officials Attacked Women In Mullaitivu

அத்தோடு குறித்த பகுதி கிராம அலுவலர் அவர்களும் குறித்த பகுதிக்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினார்.  

இங்கு கருத்து தெரிவித்த மக்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் வசதி படைத்தவர்கள் பாரிய காடுகளை வெட்டி காணி பிடிக்கிறார்கள் காசை வாங்கி கொண்டு அவர்களை அங்கு விடுகிறார்கள்.

முல்லைத்தீவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வனவள திணைக்கள அதிகாரிகள்! | Forest Officials Attacked Women In Mullaitivu

அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை எனவும் அப்பாவிகளான எங்களை மக்கள் வாழ்ந்த காணிகளில் வாழ அனுமதிக்கிறார்கள் இல்லை எனவும் தம்மால் வாடகை வீடுகளில் வாழ முடியாது எனவும் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதேவேளை குறித்த பகுதியில் நேற்று முன்தினம் (10-07-2023) 9 பேர் வனவள திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து பிணையில் விடப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வனவள திணைக்கள அதிகாரிகள்! | Forest Officials Attacked Women In Mullaitivu

இதே வேளை இன்று ஒருவர் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இவரை நீதிமன்றில் நாளை முற்ப்படுத்தவுள்ளதாக வனவள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதேவேளை தமது கடமைகளுக்கு இடையூறு என தெரிவித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு பதிவுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US