காட்டுக்குள் பரவிய தீ ; 10 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்
ஹட்டன் - செனன் பெருந்தோட்டப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

காலநிலை
இந்த காட்டுத்தீ ரொசல்ல மற்றும் ஹட்டன் தொடருந்து நிலையங்களை அண்மித்த பகுதி வரையிலும் பரவியுள்ளது ஹட்டன் பகுதியில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலையினாலேயே தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய வெப்பமான காலநிலையை தொடர்ந்து காடுகளுக்கு தீவைக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே, காடுகளுக்கு தீவைப்பவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.