இலங்கையில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள வெளிநாட்டவர்!
இலங்கையில் இருந்து ரஷ்ய நாட்டவர் ஒருவரை நாடு கடத்துமாறு காலி பதில் நீதவான் பவித்ரா சன்ஜீவனி பத்திரன தெரிவித்துள்ளார். எலெக்சேன்டர் செவென்கொவ் என்ற ரஷ்ய நாட்டவரே செல்லுப்படியாகும் வீசா இன்றி தங்கியிருந் நிலையில் நாடு கடத்தப்படவுள்ளார்.
நாடு கடத்தப்படும்வரை அதுவரை அவரை மிரிஹான இடைநிலை முகாமில் தடுத்து வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த ரஷ்ய நாட்டவர் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகைத்தந்து புஸ்ஸ கெதல பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகை பெற்று தங்கியுள்ளார்.
எனினும் கடந்த மாதங்களாக வீட்டிற்கு வாடகை செலுத்தாமையினால் வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரது வீசா 2015ஆம் ஆண்டே காலவதியானமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றசாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நாடுகடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..