வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர் அதிகாலையில் அதிரடி கைது
துபாயிலிருந்து 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பயணியொருவர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் இன்று (7) அதிகாலை ஃப்ளை துபாய் குணு-569 விமானத்தில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த பின்னரே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பிளாட்டினம் சிகரெட்டுகள்
கைதான நபர் கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் 28 ஆயிரம் "பிளாட்டினம்" சிகரெட்டுகள் அடங்கிய 140 சிகரெட் அட்டைப் பெட்டிகளை தனது சூட்கேஸிலும் ஒரு அட்டைப் பெட்டியிலும் கொண்டுவந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபர் எதிர்வரும் 10ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.