கொழும்பு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் திடீர் மரணம்
கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய (UK) பெண் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார்
இலங்கையின் கொழும்பு கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டு குடிமக்கள் திடீர் சுகயீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 24 வயதுடைய பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஆங்கிலேயப் பெண் எனக் குறிப்பிடப்பட்டது. மற்றைய இருவரும் யேர்மனி நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் எனவும் அவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.