சிங்கமலை வனப்பகுதியில் சிக்கித்தவித்த வெளிநாட்டு மாணவி பத்திரமாக மீட்பு

Sri Lanka Tourism University of Ruhuna Hatton Education
By Sulokshi Apr 07, 2026 06:07 AM GMT
Report

   ஹட்டன், சிங்கமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் சிக்கித்தவித்த 20 வயதுடைய நெதர்லாந்து நாட்டு மாணவியை ஹட்டன் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நேற்று (06) மாலை முன்னெடுக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கையானது, ஹட்டன் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த டி சில்வா தலைமையிலான குழுவினரால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

சிங்கமலை வனப்பகுதியில் சிக்கித்தவித்த வெளிநாட்டு மாணவி பத்திரமாக மீட்பு | Foreign Student Rescued Singamalai Forest Area

கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த மாணவி

நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் பகுதியைச் சேர்ந்த லூனா (Luna) என்ற மாணவி, ருகுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்துள்ளார். கடந்த 4ஆம் திகதி ஹட்டன் பகுதிக்கு வருகை தந்த அவர், சிங்கமலை மலைப் பகுதிக்கு நேற்று (06) காலை தனியாகச் சென்றுள்ளார்.

சிங்கமலை வனப்பகுதியில் சிக்கித்தவித்த வெளிநாட்டு மாணவி பத்திரமாக மீட்பு | Foreign Student Rescued Singamalai Forest Area

அங்கு சென்றபோது பாதையை கண்டறிய முடியாமல் தவித்த அவர், வழியைத் தேடியபடி சிங்கமலை மலையின் உச்சிக்குச் சென்று அங்கேயே சிக்கிக்கொண்டுள்ளார்.

இலங்கையில் ஹீரோவான 12 வயது சிறுவன்; தனது குடும்பத்தை காப்பாற்றி வீரச்செயல்!

இலங்கையில் ஹீரோவான 12 வயது சிறுவன்; தனது குடும்பத்தை காப்பாற்றி வீரச்செயல்!

குறித்த மாணவியின் கல்வி நடவடிக்கைகளுக்காக ருகுணு பல்கலைக்கழகத்திற்கும் ஹட்டன் பகுதிக்கும் இடையில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர், ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தார்.

சிங்கமலை வனப்பகுதியில் சிக்கித்தவித்த வெளிநாட்டு மாணவி பத்திரமாக மீட்பு | Foreign Student Rescued Singamalai Forest Area

அந்த முறைப்பாட்டிற்கு அமையத் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின் பேரில், வனப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்ட பொலிஸார், பாறை ஒன்றின் மேல் தவித்துக் கொண்டிருந்த மாணவியை மீட்டு பாதுகாப்பாகக் கீழே அழைத்து வந்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கையில் பொலிஸ் சார்ஜன்ட்களான பாலசூரிய (8824), சிறி (39127) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மதுஷான் (89877) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

விசேட சலுகையுடன் நாடாளுமன்றம் வரும் ஜனாதிபதி

விசேட சலுகையுடன் நாடாளுமன்றம் வரும் ஜனாதிபதி

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US