ட்ரோன் கேமரா விட்ட வெளிநாட்டு பிரஜை கைது
உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தினை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயதான அமெரிக்க பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் நேற்று வெள்ளிக்கிழமை காலை (07) கண்டி சுற்றுலா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்டபகுதி
உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தின் மீது சந்தேக நபர் நேற்றைய தினம் ட்ரோன் கேமராவை செலுத்தியுள்ளார்.
கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்ததுடன் குறித்தகேமராவில் பதிவான காட்சிகளை நீக்க பொலிஸ் தொழில்நுட்ப பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.