இலங்கையில் கடத்தப்பட்ட வெளிநாட்டு பிக்கு!
பிலியந்தலை, மடபான பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த பிக்குவொருவர் தாம் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் (12) 7 பேர் கொண்ட குழுவினரால், தாம் வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டு அன்று மாலை ஹாலி எல பகுதியில் கைவிடப்பட்டதாக பிக்கு முறைப்பாடளித்துள்ளார்.
மஹரகம பொலிஸ் நிலையத்தில் விசாரணையொன்றிற்காக சென்று திரும்பும் வழியில், 26 வயதான பிக்குவின் முகம், கைகளை கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்று ஹாலி எல பகுதியில் இறக்கிவிடப்பட்டதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தாம் கடத்தப்பட்டு வீதியில் விட்டுச் சென்றதாக முறைப்பாடு செய்த பங்களாதேஷ் பிக்கு பதுளை பொது வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
எனினும் பங்களாதேக்ஷ் பிக்கு கடத்தப்பட்டமை சம்பவம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
