யாழில் பெருந்தொகை மோசடி செய்தவரின் சொத்துக்கள் முடக்கம்; நீதிமன்றம் அதிரடி
யாழில் வெளிநாட்டு ஆசைகாட்டி பலரிடம் லட்சக்கணக்கில் பெருந்தொகை மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவாகியுள்ள வபருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியைச் சேர்ந்த சந்தேக நபர் வெளிநாட்டில் வேலைபெற்றுத் தருவதாகக்கூறி பல லட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.

பல்வேறு தரப்பினரும் பொலிஸாரிடம் முறைப்பாடு
சந்தேக நபருக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ள நிலையில், சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து குறித்த நபருக்கு எதிராக கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் தற்போதுவரை அவர் அவர் பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முன்னிலையாகவில்லை.

இதையடுத்தே குறித்த நபரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரின் சொத்துக்களை முடக்குவது தொடர்பில் பொலிஸார் ஒலிபெருக்கியில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
