5 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் பறிமுதல்
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சொந்தமான (Cargo Village ) களஞ்சியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் இலங்கை சுங்க அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (28) கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வெளிநாட்டு சிகரட்டுகள் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக சுங்கவரி செலுத்தாமல் டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெளிநாட்டு சிகரட்டுகள் கடந்த ஜனவரி மாதம் டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இந்த வெளிநாட்டு சிகரட்டுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.